இலங்கையில் 3 குண்டுவெடிப்பு இந்திய அரசு கவலை
இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அங்குள்ள இந்திய தூதரிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும், நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் 3 சர்ச்களில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கொழும்புவில் உள்ள செயின்ட் அந்தோணி சர்ச், மேற்கு கடலோரப் பகுதியான நெகம்போவில் உள்ள ஸ்டீபன் சர்ச், மட்டக்கிளப்பில் உள்ள சர்ச் என்று மூன்று சர்ச்சுகளிலும், ஸ்டார் ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்புகளில் 49 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இலங்கை குண்டு வெடிப்பு கவலை அளிக்கிறது. இது தொடர்பாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். இலங்கையில் தற்போதுள்ள நிலைமை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் பயங்கரம் : தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு - ஏராளமானோர் பலி