இலங்கை குண்டுவெடிப்பு தகவல்! தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!
ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் 3 சர்ச்களில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கொழும்புவில் உள்ள செயின்ட் அந்தோணி சர்ச், மேற்கு கடலோரப் பகுதியான நெகம்போவில் உள்ள ஸ்டீபன் சர்ச், மட்டக்கிளப்பில் உள்ள சர்ச் என்று மூன்று சர்ச்சுகளிலும், ஸ்டார் ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்துள்ளன.
இந்த குண்டுவெடிப்புகளில் 49 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கொழும்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இலங்கை குண்டு வெடிப்பு குறித்த தகவல்கள், உதவி தேவைப்படும் இந்தியர்கள் +94777903082 +94112422788 +94112422789 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு!