4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் - 2 ரவுண்டு பிரசாரம் செய்கிறார் கமல்
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் 2 கட்டமாக மொத்தம் 12 நாட்கள் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், தனது பிரச்சார பயணத் திட்டத்தையும் அறிவித்துள்ளார் கமலஹாசன். அதன்படி மே மாதம் 3, 4 தேதிகளிலும் பின்னர் 14-ந் தேதியும் ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரம் செய்கிறார்.
மே 5, 6 தேதிகள் மற்றும் மே 15-ல் திருப்பரங்குன்றம் தொகுதியிலும், மே 10, 11 மற்றும் மே 17-ந் தேதிகளில் சூலூரிலும், மே 12, 13 மற்றும் மே 16-ல் அரவாக்குறிச்சியிலும் இரு கட்டங்களாக தொகுதிக்கு 3 நாட்கள் வீதம் மொத்தம் 12 நாட்கள் 4 தொகுதிகள் முழுவதும் வலம் வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக கமல் தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறிவாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த பெண் தாசில்தார்...! மதுரையில் நள்ளிரவு பரபரப்பு