கொழும்பு விமான நிலையத்தில் நவீன பைப் வெடிகுண்டு இலங்கையில் தொடரும் பதற்றம்
இலங்கையில் அந்நாட்டு விமானப்படை கொழும்பு விமான நிலையம் அருகே நேற்று இரவு நவீன பைப் வெடிகுண்டை கண்டுபிடித்து செயல் இழக்க செய்தது. இதனால் பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன. கொழும்புவில் உள்ள செயின்ட் அந்தோணி சர்ச், மேற்கு கடலோரப் பகுதியான நெகம்போவில் உள்ள ஸ்டீபன் சர்ச், மட்டக்கிளப்பில் உள்ள சர்ச் என்று மூன்று சர்ச்சுகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதே போல், கொழும்புவில் கிங்ஸ்பரி, சங்ரிலா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. இதில் தற்போது 200 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். 450 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.
இந்நிலையில், கொழும்பு விமான நிலையம் அருகே நவீன பைப் வெடிகுண்டு இருப்பதாக அந்நாட்டு விமானப்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விமானப்படை வீரர்கள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது விமான நிலையம் அருகே நவீன பைப் வெடிகுண்டு இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
அதனையடுத்து அந்த பைப் வெடிகுண்டை கவனமாக செயல் இழக்க செய்தனர். இதனால் அந்த பகுதியில் பலத்த உயிர் மற்றும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. நேற்று நடந்த தாக்குதலை அடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோயில்கள், தேவலாயங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் முக்கியமாக விமான நிலையம் பகுதியில் நாசவேலைக்காரர்கள் பைப் வெடிகுண்டை வைத்திருந்தது பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் கொடுத்துள்ளது. தற்போது இலங்கை முழுவதும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
`ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை' - இலங்கை மக்களுக்கு ரஜினிகாந்த் இரங்கல்