விருத்தாசலம் ஏரியில் ஒரு வாரமாக மிதந்த பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?
விருத்தாலம் பகுதியில் உள்ள ஏரியில் ஒரு வாரத்துக்கு மேலாக மிதந்த பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரளுர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. ஏரி அருகே ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் ஏரியில் சடலம் மிதப்பதை பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலில் ஆடையின்றி மிதந்த அந்த சடலத்தை கைப்பற்றினர். அந்த சடலத்தில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரிந்தது. அந்த பெண்ணின் உடல் குறைந்தபட்சம் ஒரு வாரம் அந்த ஏரியில் கிடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாமோ என்றும் போலீசார் கருதுகின்றனர். தற்கொலை செய்து கொள்ளுபவர்கள் ஆடைகளை களைந்து விட்டு தற்கொலை செய்ய மாட்டார்கள்? எனவே அது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவராக என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே தெளிவான விடை கிடைக்கும்.
முசிறி வனப்பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தால் பரபரப்பு