சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அப்பாவியை கொலை செய்த நபர்
கேரளாவில் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக முன் பின் தெரியாத அப்பாவி மனிதரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் உள்ள மணன்சீராவில் அந்நகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. நேற்று அந்த அலுவலகத்தின் வெளியே சாலையில் சென்ற ஒரு நபரை கத்தியால் குத்திவிட்டு ஒருவர் போலீசில் சரண் அடைந்தார்.
சரண் அடைந்த நபரால் கத்திக்குத்து பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இதனையடுத்து போலீசர் சரண் அடைந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவன் பெயர் பிரபின் தாஸ் என்றும் வளயம் பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. மேலும் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அந்த நபரை குத்தியதாகவும், அவர் யார் என தனக்கு தெரியாது என்றும் பிரபின் தாஸ் போலீசாரிடம் கூறினான்.
அதேசமயம், சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கத்தியால் குத்தியதாக பிரபின் தாஸ் கூறுவதால் போலீசாருக்கு அவன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், பிரபின் தாசுக்கு மனநலம் எதுவும் பாதிக்கப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. தற்போது பிரபின் தாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஒருதலை காதல்.. ‘சைக்கோ’ கொலையில் முடிந்தது –பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை