வாழ்வதற்கு ஏற்ற உலகின் சிறந்த 12 நாடுகள் எது தெரியுமா?

உலகில் அனைத்து வகையிலும் நலமாய் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் என்ற 12 நாடுகள் கொண்ட பட்டியலை ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்காக சுமார் 200 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. நீண்ட ஆயுள், உடல்நலம், செலவினம், கல்வி, பாலின சமத்துவம், பொருளாதாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அதனடிப்படையில், அனைத்து வகையிலும் நலமாய் வாழத் தகுந்த உலகின் சிறந்த 12 நாடுகள் கொண்ட பட்டியலை ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பு ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில், நீண்ட ஆயுளுக்கு ஹாங்காங், பொருளாதாரத்துக்கு அமெரிக்கா, கல்வித்துறைக்கு கனடா, உயர்தர வாழ்க்கை செலவினம் மற்றும் ஆயுளுக்கு ஐஸ்லாந்து ஆகியவை சிறப்பான நாடுகள் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல குற்றங்கள் குறைவுக்கு அயர்லாந்து, வருவாய் சமநிலைக்கு நெதர்லாந்து, சராசரி செலவினம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு சிங்கப்பூர், இரு பாலினத்தவருக்கும் சராசரி வருமானம் பெறுவதற்கு டென்மார்க் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச தங்கும் வசதி மற்றும் மேல்நிலை படிப்பு முடித்தவர்களுக்கு ஜெர்மனி, மலேரியா, எச்.ஐ.வி. உள்ளிட்ட நோய் தாக்கம் இல்லாததற்கு சுவிட்சர்லாந்து, 20 ஆண்டு பள்ளிப் படிப்புக்கு ஆஸ்திரேலியா, உயர்தர வாழ்க்கை வாழ்வதற்கு நார்வே ஆகிய நாடுகள் சிறப்பானவை என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

More News >>