கருப்பசாமி கோவில் கூட்ட நெரிசலில் 7பேர் பலி பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு
திருச்சியில் உள்ள கருப்பசாமி கோவிலில் நடந்த திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள கருப்பசாமி கோவிலில் சித்ரா பெளர்ணமி முன்னிட்டு பிடிக்காசு வழங்கும் உள்ளூர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 7 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய 10பேர் படுகாயங்களுடன் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அறிவித்தார்.
திருச்சியில் நடந்த இந்த சம்பவத்தை அறிந்த பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது மட்டுமல்லாமல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடும் திருவிழாவில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே இந்த விபரீத சம்பவத்துக்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்; மேலும் 2 இந்தியர்கள் பலி