சுமித்ரா மகாஜனுக்கும் சீட் கொடுக்கவில்லை!

பா.ஜ.க.வில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் தரப்படவில்லை. அவரது தொகுதியி்ல் சங்கர் லால்வானி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

பா.ஜ.க.வில் அமித்ஷா தலைவரான பிறகு, கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவி கேட்காமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத விதிமுறையை கொண்டு வந்தார். அதே போல், மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட இந்த முறை வாய்ப்பு தரப்பவில்லை. அத்வானியின் காந்திநகர் தொகுதியில் அமி்த்ஷாவே இம்முறை போட்டியிடுகிறார்.

இந்நிலையில், கட்சியி்ன் மூத்த தலைவரும், மக்களவை சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் தற்போது 76 வயதை எட்டி விட்டதால் அவரும் புறக்கணிப்படுவாரோ என்ற சந்தேகம் கிளப்பப்பட்டு வந்தது. எனினும், அவர் மோடியின் குட்புக்ஸில் இருப்பதால் சீட் கொடுக்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால், சுமித்ரா கடந்த 1989ம் ஆண்டு முதல் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார்.

இந்த முறை மத்தியப் பிரதேசத்தில் பல தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த பா.ஜ.க. மேலிடம், இந்தூருக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் காலம்தாழ்த்தியது. இந்நிலையில், தனக்கு சீட் கொடுப்பதில் முடிவெடுக்க முடியாமல் கட்சி மேலிடம் தயங்குவதாக தெரிவதால், தானே போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டார் சுமித்ரா.

இதைத் தொடர்ந்து நேற்று அந்த தொகுதிக்கு பா.ஜ.க. வேட்பாளராக சங்கர் லால்வானியை கட்சி மேலிடம் நேற்று அறிவித்துள்ளது. மேலும், டெல்லியில் சாந்தினி சவுக் தொகுதிக்கு ஹர்ஷ் வர்த்தனையும், வடகிழக்கு டெல்லிக்கு மனோஜ் திவாரியையும், மேற்கு டெல்லிக்கு பிரவேஷ் வர்மாவையும், தெற்கு டெல்லிக்கு ரமேஷ் பிதுரியையும் வேட்பாளர்களாக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. இவர்கள் நால்வருமே இப்போது அதே தொகுதிகளின் எம்.பி.க்களாக இருப்பவர்கள். மேலும், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொதிக்கு ஹர்தீப் புரியை வேட்பாளராக பா.ஜ.க. மேலிடம் அறிவித்துள்ளது.

மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்கும் தடை! –தேர்தல் ஆணையம் ‘அதிரடி’
More News >>