சென்னையில் சாலையில் பைக் ரேஸ்: 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவில் பந்தயத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஐந்து இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் சாலையில் பைக் ரேசில் ஈடுபடுகின்றனர். சாலையில் பந்தயத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, அவர்கள் உயிருக்கும் ஆபத்தாக முடிந்து விடுகிறது. சாலையில் பைக் ரேசில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும், சில இளைஞர்கள் பந்தயத்தில் ஈடுபடுகின்றனர்.
ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் நேற்று நள்ளிரவு சில இளைஞர்கள் பந்தயத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அதிவேகமாக அவர்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனங்களை போலீசார் நள்ளிரவில் மடக்கிப் பிடித்தனர். பந்தயத்தில் அவர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஐந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளை, மெரினா போக்குவரத்து போலீசில் ஒப்படைக்கப்பட்டன. மேலும் வாகனங்களை ஓட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே ராயப்பேட்டையில் பந்தய சாகங்கள் நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
`மோதிப் பார்க்கணும்னா நீங்க சவால் விட வேண்டியது ஸ்ரீரெட்டிகிட்டதான்' - லாரன்ஸை சீண்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி