தீவிரவாத தாக்குதல் மீண்டும் நடத்தப்படலாம்! இலங்கையை எச்சரிக்கும் அமெரிக்கா
இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களைக் குறிவைத்தது மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்து உள்ளது அமெரிக்கா.
இலங்கையில் நேற்று 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர சோதனைக்குப் பின் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதற்கிடையில், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மூலம் ஓட்ட மாவடியைச் சேர்ந்த உமர் என்பவர் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கொழும்புவின் கட்டுநாயக்க விமான நிலையம் அருகே இன்று போலீசார் நடத்திய சோதனையில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனால், அங்கு மேலும் பதற்றமான சுழல் நிலவுகிறது. மேலும், இலங்கைக்குச் சுற்றுலா சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் மாயமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களைக் குறிவைத்தது மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்து உள்ளது அமெரிக்கா. இலங்கையில் பதற்றமான சுழல் நிலவுவதால் அங்கு செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது அமெரிக்க அரசு.
கொழும்பு விமான நிலையத்தில் நவீன பைப் வெடிகுண்டு; இலங்கையில் தொடரும் பதற்றம்