மும்பையின் பிரபல சந்தையில் பயங்கர தீ விபத்து...

மும்பையில் இன்று சில மணி நேரங்களுக்கு முன், பிரபலமான க்ராப்போர்டு சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தெற்கு மும்பையில் உள்ள பிரபலமான சந்தை க்ராப்போர்டு. உள்ளூர்வாசிகள் அதிகம் ஷாப்பிங் வரும் பகுதியாக இந்த சந்தை விளங்குகிறது. மேலும் நகரத்தின் மிகப்பெரிய மொத்தவிலை சந்தையும் இதுதான். இதனால் இந்த சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

இந்நிலையில் இன்று காலையில் சந்தையின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 4 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தைகள் கடைகள் திறக்கும் நேரத்தில் இந்த தீ விபத்து நடந்துள்ளதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் ஏராளமான பொருட்கள் தீயில் கருகின.

பிரான்ஸின் 850 ஆண்டுகள் பழமையான நாட்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து
More News >>