செந்தில், கவுண்டமணி போல மோடி பேசுகிறார் - குஷ்பூ தாக்கு
செந்தில், கவுண்டமணி போல் நாம் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் அதுதான் இது என்கிறார் பிரதமர் மோடி என காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் முக்கூடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, “நாம் முன்பு எங்கிருந்தோம் என்பது முக்கியமல்ல. இப்போது எங்கே இருக்கிறமோ அங்கே நாம் 100 சதவீதம் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, இப்போது ராகுல்காந்தி என குடும்பமே கட்சிக்காக தங்களை அர்ப்பணித்த அந்த கட்சியை யாராலும் அழிக்கமுடியாது.
பிரதமர் மோடி எங்கு சென்றாலும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடை அணிந்து நாடு நாடாக சுற்றுகிறார். அவர் மக்களையும், விவசாயிகளையும் பற்றி கவலைப்படவில்லை.
கவுண்டமணி செந்தில் போல் நாம் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் அதுதான் இது என்கிறார். மற்றொரு கேள்வி கேட்டால் அதானே இது என பதில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.