சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல தயாராகிறார் விஜயகாந்த்!

மேல் சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்ற அவர், அண்மையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று இந்தியா திரும்பினார். உடல்நலம் காரணமாக கட்சி பணிகளில் இருந்து சற்று விலகி இருந்த விஜயகாந்த், விட்டில் ஓய்வெடுத்து வந்தார். விஜயகாந்த்துக்கு பேசுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவருக்குப் பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அரசியல் ரீதியாக முக்கிய பிரமுகர்களை மட்டும் நேரில் சந்தித்து வந்தார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் நான்கு தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிட்டது. வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பரப்புரை மேற்கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சென்னையில் வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்தார்.

இதனையடுத்து, தேர்தல் முடிவடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன், அவரின் மனைவி பிரேமலதாவும் செல்கிறார். அதே நேரத்தில், 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளதால், பிரசாரத்தை முடித்துவிட்டு அமெரிக்க செல்லலாமா? அல்லது பிரசாரத்தை தவிர்க்கலாமா? என பிரேமலதா ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தன் கட்சி வேட்பாளர் பெயரையே தவறாக உச்சரித்த விஜயகாந்த் ...! சென்னை பிரச்சாரத்தில் ருசிகர காட்சிகள்
More News >>