இலங்கையில் தொடரும் பதற்றம்..! குண்டை செயலிழக்கச் செய்தபோது வெடித்தது

இலங்கையில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய முயன்றபோது, எதிர்பாராமல் குண்டு வெடித்தது. இதில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளன.

300-க்கும் மேற்பட்ட பேரின் உயிரைக் குடித்திருக்கும் இலங்கை குண்டு வெடிப்பு குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த மூன்று மாதங்களாக இந்த தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைநகர் கொழும்புவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 24 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இவர்களை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தியதாகக் கூறி சிறிய வேன் ஒன்றையும் கைப்பற்றிய போலீஸார், அந்த வேன் ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொழும்பு பிரதான பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டு அவைகளை செயலிழக்கச் செய்தனர் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர். இதையடுத்து, கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டைச் செயலிழக்க செய்ய முயன்றபோது திடீரென குண்டு வெடித்தது. இதில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளன. தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் இலங்கையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தீவிரவாத தாக்குதல் மீண்டும் நடத்தப்படலாம்! –இலங்கையை எச்சரிக்கும் அமெரிக்கா
More News >>