கட்சி தொடங்குவது குறித்து தேர்தல் வந்தால் யோசிக்கலாம் - விஷால் அதிரடி
அரசியல் கட்சி தொடங்குவது குறித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் யோசிக்கலாம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பேருந்து கட்டண உயர்வால் மக்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அரசு கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். பொதுமக்கள் பெரிதாக பாதிக்கும் அளவுக்கு பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. பேருந்து கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் யோசிக்கலாம். மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து நடத்துள்ளது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.