சுவையான பிரெட் வெஜ் மசாலா ரெசிபி
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான மற்றும் சத்தான பிரெட் வெஜ் மசாலா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
பட்டர் - 1 டேபிள் ஸ்பூன்
பிரெட் துண்டுகள் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 10 பல்
கேரட் - கால் கப்
கோஸ் - அரை கப்
குடை மிளகாய் - கால் கப்
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில், பிரெட் ஸ்லைஸ்களை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும், சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.இந்நிலையில், சீவிய கேரட், பொடியாக நறுக்கிய கோஸ், குடை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
கூடவே, இஞ்சி பூண்டு விழுது, சாட் மசாலா, மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
காய்கள் நன்றாக வெந்ததும், பிரெட் துண்டுகளை சேர்த்து மிதமாக கிளறிவிடவும்.
இறுதியாக, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பிரெட் மசாலா ரெடி..!
சுவையான பிரெட் ஆம்லெட் ரெசிபி