சூப்பர் லன்ச் ரெசிபி உருளைக்கிழங்கு சாதம் இதோ..
ஸ்கூல், ஆபிஸ் செல்வோருக்கு சுவையான உருளைக்கிழங்கு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
வடித்த சாதம் - 2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - அரை டீஸ்பூன்
இஞ்சி - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 1
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:ஒரு வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், உப்பு சேர்த்து ஒன்று அடுத்து ஒன்றாக வதக்கவும்.
பிறகு, உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்ததுடன், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர், தயிர் சேர்த்து கிளறி வதக்கவும்.
உருளைக்கிழங்கு வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும், வடித்த சாதத்தை சேர்த்து மசாலா முழுவதும் பரவும்படி கிளறவும்.
இறுதியாக கொத்தமல்லித் தூவி இறக்கினால் சுவையான லன்ச் ரெசிபி உருளைக்கிழங்கு சாதம் ரெடி..!
சுவையான சிற்றுண்டி ரவை கிச்சடி ரெசிபி