மோடி, அமித் ஷா, அத்வானி, ஜெட்லிக்கு ஒரே தொகுதியில் ஓட்டு - நாளை வாக்களிக்கின்றனர்
பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, பிரதமர் மோடி, அமித்ஷா, அருண் ஜெட்லி ஆகிய 4 பேருக்கும் குஜராத் தலைநகர் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ஓட்டு உள்ளது. இங்கு நாளை நடைபெறும் தேர்தலில் இவர்கள் ஓட்டுப் போட உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளிலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மாநில தலைநகரான காந்திநகர் தொகுதியில் பல முறை போட்டியிட்டு வென்ற பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, அக்கட்சியின் தேசியத் தலைவரான அமித் ஷா இம்முறை போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் தான் பிரதமர் மோடி, எல்.கே.அத்வானி, அமித் ஷா, நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் ஓட்டு உள்ளது. நாளை நடைபெறும் தேர்தலில், இவர்கள் அனைவரும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. பிரதமர் மோடியும் தனி விமானத்தில் வாக்களிக்கச் செல்கிறார். குஜராத்தில் கடந்த 2014-ல் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் மொத்தமாக அறுவடை செய்தது பாஜக .ஆனால் இம்முறை காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பலவீனமாகி விட்ட மோடி! பிரியங்கா காந்தி தாக்கு!!