தாராபுரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்த சித்தாப்பாவை தாக்கிய அண்ணன் மகன்

தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறி சித்தாப்பாவை அவரது அண்ணன் மகனே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் ஒன்றிய அதிமுக துணை செயலாளர் பொறுப்பில் இருப்பவர் நாட்டுத்துரை, இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தாராபுரம் ஒன்றிய திமுக மாணவரனி செயலாளரும், நாட்டுத்துரையின் அண்ணன் மகனுமான ஆதித்யன் தனது சித்தாப்பாவிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தது ஏன் ? என கேட்டு விட்டு அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார்.

தனது அண்ணன் மகன் தன்னை தாக்கியதும், தான் தாக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நாட்டுத்துறை சேர்ந்தார். பின் ஊர் பெரியவர்கள் சமரசத்தை ஏற்று, தனது அண்ணன் மகனை மன்னித்து விட்டார். மேலும் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை.

ஆதித்யன் தனது சொந்த சித்தாப்பாவை தாக்குவதை வீடியோ பிடித்த ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. தனது சித்தாப்பா என்று கூட பாராமல் அண்ணன் மகனே அவரை அடித்த சம்பவம், அரசியல் எப்படி குடும்ப உறவுகளை சிதைக்கிறது என்பதை பாருங்க.

குறைந்த வாக்கு சதவிகிதம் - மக்களவை தேர்தலில் 70.90% வாக்குப்பதிவு
More News >>