சீர்காழியில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட 90 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

சீர்காழியில் கோயில் திருவிழாவில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சீர்காழி அடுத்த வானகிரியில் பிரசித்தி பெற்ற ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஐஸ் க்ரீம் வாங்கி சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தைகளின் பெற்றோர் அவர்களை உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் பாதிக்கப்பட்ட விஷயத்தை அறிந்த போலீசார் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் திருவிழாவில் இருந்த 7 ஐஸ் க்ரீம் கடைகளிலிருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பினர்.

குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ் க்ரீமில் எதுவும் ஆபத்தான ரசாயனங்கள் கலந்து இருந்ததா அல்லது தரம் குறைவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது ஆய்வு முடிவில்தான் தெரிய வரும் தகவல்.

நாமக்கல் மருத்துவமனை சுவர் இடிந்து டாக்டர் உள்பட 2 பேர் பரிதாப பலி
More News >>