3ம் கட்ட மக்களவைத் தேர்தல் அகமதாபாத்தில் மோடி, அமித்ஷா வாக்களித்தனர்!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தினர்.
நாடு முழுவதிலும் உள்ள 14 மாநிலங்களில் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 23) தேர்தல் நடக்கிறது.
அசாம், பீகார், சத்திஷ்கர், ஜம்மு – காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒடிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மக்களவைத் தொகுதிகளுக்கும், குஜராத், கேரளா, தாத்ரா – நாகர்வேலி, கோவா மற்றும் டாமன் – டையூவில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
மொத்தமுள்ள 115 மக்களவைத் தொகுதிகளில் 1,612 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அகமதாபாத்தின் ரணிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இருவரும் ஒன்றாக வந்து தங்களின் வாக்குகளை செலுத்தினர்.
வாக்களிக்கும் முன்பாக தனது தாயாரை சந்தித்த பிரதமர் மோடி அவரிடம் ஆசி பெற்று பின்னர் வாக்குச்சாவடிக்கு சென்றார்.
அதே போல கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.சி. அமலா ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்று பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.
மோடியை எதிர்ப்பது யார்? மிரட்டும் எதிர்க்கட்சிகள்!!