குழந்தைகளின் தொல்லை இல்லாமல் அம்மாக்கள் வாக்களிக்க இப்படியொரு ஏற்பாடு எங்கு தெரியுமா?

3ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் தொல்லையின்றி அம்மாக்கள் வாக்களிக்க வகை செய்யும் விதமாக அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

3ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நாட்டில் உள்ள 14 மாநிலங்களில் காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அசாம் மாநிலத்தில் உள்ள பாங்கைகான் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், சிறு வயது குழந்தைகள் உடைய அம்மாக்கள் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் பெற்றோர்களை தொந்தரவு செய்யாமல் அவர்களை வாக்களிக்க செல்ல அனுமதிப்பதற்காக, வாக்குச்சாவடி அருகே சிறுவர் விளையாட்டு பூங்காவை அந்த வாக்குச்சாவடி மையம் அமைத்துள்ளது.

அங்கு சிறுவர்களுக்கான ஓவியப் போட்டிகள், பந்து விளையாட்டுகள் என பல போட்டிகளும் நடத்தப்பட்டு வருவதால், வரிசையில் நின்று ஓட்டுப் போடும் பெற்றோர்களை குழந்தைகள் டார்ச்சர் செய்யும் வேலையே இல்லாமல் போய்விட்டது.

இதேபோன்று அனைத்து வாக்குச்சாவடிகளும் ஏற்பாடு செய்தால், நன்றாகத் தான் இருக்கும். ஆனால், இங்கு பல வாக்குச்சாவடிகளில் வெயிலில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒரு சிறிய பந்தலோ அல்லது குடிநீர் வசதியோ கூட ஏற்படுத்தி தருவதில்லை என்பது தான் நிதர்சனம்.

மே 23ம் தேதிக்கு பிறகு..ரஜினியின் அரசியல் பிரவேசம்..? -சத்யநாராயணராவ் ‘பளிச்’
More News >>