காவேரி நீர் கிடைக்காது கடலில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் - சுப்பிரமணிய சாமி திமிர்
காவேரி தண்ணீர் என்றால் கிடைக்காது. தண்ணீர் வேண்டுமானால் கடலில் இருந்து தாராளமாக உற்பத்தி செய்யலாம் என்று பாஜக மூத்த தலைவர்களுல் ஒருவரான சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து போது கூறிய அவர், “முதலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு தண்ணீர் வேண்டுமா? இல்லை காவிரி தண்ணீர் வேண்டுமா?
காவேரி தண்ணீர் என்றால் கிடைக்காது. தண்ணீர் வேண்டுமானால் கடலில் இருந்து உப்பை நீக்கி குடிக்க தண்ணீரும், விவசாயத்திற்கு தண்ணீரும் தாராளமாக உற்பத்தி செய்யலாம். முதலமைச்சருக்கு அதற்கான வழி தெரியாவிட்டால் என்னிடம் சொல்லட்டும். நான் வாங்கி கொடுக்கிறேன்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காததற்கு, தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளே அதற்கு காரணம். அனைவரும் நாடாளுமன்றத்தில் ஊமையாக அமர்ந்துள்ளனர். யாரும் வாயை திறப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.