மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் பெரம்பலூர் கும்பல்
பொள்ளாச்சி சம்பவத்தை போன்று குடும்ப பெண்கள், மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் பெரம்பலூர் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூரில் ஒரு கும்பல், பல குடும்ப பெண்கள், மாணவிகளிடம் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று தங்களின் காம இச்சைக்கு இணங்க வைத்து, அதனை வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். அந்த கும்பல் அடிக்கடி அவர்களை மிரட்டி தங்களிடமும், பிறரிடமும் பாலியல் இச்சைக்கு இணங்க சொல்லி வற்புறுத்துகின்றனர். இணங்க மறுக்கும் பெண்களிடம் தாங்கள் எடுத்த வீடியோவை காட்டி அதனை வெளியிடுவோம் என்று மிரட்டி பணிய வைக்கின்றனர்.
அப்படி ஒரு பெண்ணிடம் அவர்கள் மிரட்டிய போது, பாதிக்கப்பட்ட அந்த பெண் தைரியமாக காவல் துறையிடம் புகார் கொடுத்தார். அதன் பிறகுதான் அந்த கும்பல் பற்றிய விஷயம் வெளிஉலகுக்கு தெரியவந்தது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல் உத்தரவின் பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி 3 பிரிவுகளின் கீழ், அந்த கும்பலை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி பிரமுகர், போலி நிருபர் மற்றும் சில பேர் மீது வழக்கு செய்தார். இந்த கும்பலால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் விசாரணையில் தெரியவரும்.
பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை போன்று பெரம்பலூரில் நடந்திருப்பதால் தமிழகத்தில் மேலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அப்பாவியை கொலை செய்த நபர்