அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ப்ரீமியர்: போட்டிப் போட்டு கவர்ச்சி காட்டிய ஸ்கார்லெட் மற்றும் பிரை லார்சன்!

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரை லார்ஸன் மற்றும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் கவர்ச்சி உடை அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

உலகமே ஆவலாய் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் வரும் ஏப்ரல் 26ம் தேதி ரிலீசாகிறது. இதன் ப்ரீமியர் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸில் களைகட்டியுள்ளது.

மார்வெல் திரையுலகின் மொத்த சூப்பர் ஹீரோக்களும் அணி திரண்டுள்ள எண்ட்கேம் படத்தின் ப்ரீமியர் என்பதால், முன்னணி சூப்பர் ஹீரோ நடிகர்களான ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவான்ஸ், ஜெரிமி ரென்னர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ரஃப்பலோ, ஸ்கார்லெட் ஜோஹன்சன், பிரை லார்சன், பால் ரட் மற்றும் பல சூப்பர் ஹீரோக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதில், கேப்டன் மார்வெலாக அசத்திய பிரை லார்சன் மற்றும் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் படு கவர்ச்சியாக நிகழ்ச்சிக்கு வந்து பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

பர்ப்பிள் நிற உடையில் சிக்கென பிரை லார்சனும், மிளிரும் கிளிட்டர் உடையில் படு கவர்ச்சியாக ஸ்கார்லெட் ஜோஹன்ஸனும் ப்ரீமியர் நிகழ்ச்சியை கவர்ச்சி ஃபெஸ்டிவலாக்கினார்.

மேலும், சிவப்பு நிற உடையில் நடிகை எவாஞ்சலினும், கரும்பச்சை நிற கிளிட்டர் உடையில் ஓல்சேனாவும் கலந்து கொண்டனர்.

அயன்மேனுக்கு விஜய்சேதுபதி வாய்ஸா? ஐயோ சகிக்கல.. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் தமிழ் ட்ரெய்லரை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
More News >>