பேஸ்புக்கில் 20 கோடி போலி கணக்குகளா? இந்தியாவிற்கும் இதில் முக்கிய பங்கு.. ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகளவில், பேஸ்புக்கில் சுமார் 20 கோடி பேர் போலி கணக்குகள் வைத்துள்ளதாகவும், இதில் இந்தியாவிற்கும் முக்கிய பங்கு இருப்பதாகவும் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் டிஜிட்டல் என்ற ஒன்று பரவி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால், உலகமே தனது கையில் இருப்பது போன்ற உணர்வு தான் ஒவ்வொருவரிடமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஸ்மார்ட்போன். இதன் மூலம் தெரிந்துக்கொள்ள முடியாது விஷயங்களே இல்லை. கூடுதலாக, பேஸ்புக் தொடர்ந்து ட்விட்டர், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு இளைஞர்கள் மத்தியில் ஸ்மார்ட் போன்களின் மவுசு கூடிவிட்டது என்றே கூறலாம்.

இதனால், பேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.ஆனால், சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துபவரை விட தீய விஷயங்களுக்கு பயன்படுத்துபவர்கள் தான் அதிகமாக உள்ளனர். அதற்கு ஓர் எடுத்துகாட்டு தான் பேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகள். உலகளவில் 20 கோடி போலி கணக்குகள் பேஸ்புக்கில் இருப்பதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, சமூக வலைத்தளங்களில் ராஜாவாக விளங்கி வரும் பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

இதில், குறிப்பாக சராசரியாக மாதந்தோறும் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 14 சதவீதம் வளர்ச்சி அடைந்து 213 கோடியாக உயர்ந்துள்ளது.இதேபோல், அன்றாடம் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி அன்று இருந்த எண்ணிக்கையை விட 14 சதவீதம் வளர்ச்சி அடைந்து 140 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி பேஸ்புக்கில் போலி கணக்குகள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 20 கோடியாக உயர்ந்துள்ளது.இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், போலி கணக்குகள் அதிகரிப்பதற்கு வர்த்தக ரீதியாக வளர்ச்சி அடைந்து வரும் இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம் போன்ற நாடுகளை சேர்ந்த பயனாளர்களும் முக்கிய காரணமாம்.

இந்த போலி கணக்குகளில், குறிப்பாக ஒரு பயனாளர் தனது இரண்டாவது உபரி கணக்காக தொழில் மற்றும் வர்த்தகம், அமைப்பு சார்ந்த நிறுவனங்களை முதன்மைப்படுத்துவதற்காகவும், வளர்ப்பு பிராணிகள் ஆகியவற்றுக்காக தொடங்கி நிர்வகிக்கப்பட்டு வரும் கணக்குகளாக பயன்படுத்தி வருவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News >>