போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பார்த்த ஷாக்கான போலீசார்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டு பிடித்தனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபரை பார்த்து அவர்கள் ஷாக் ஆகி விட்டனர்.
சென்னை எக்மோர் ரயில் நிலையத்தின் வடக்கே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை போலீசார் ஆய்வு செய்ததில், அது ராயப்பேட்டையை சேர்ந்த ஒருவருடைய எண் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 8ம் வகுப்பு படித்து வரும் சிறுவன், விளையாட்டாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என ராயப்பேட்டை காவல்துறையினர் சிறுவனை எச்சரித்து அனுப்பினர்.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் சர்வதேச போலீஸ் விசாரணை! இன்று துக்கதினம் அனுசரிப்பு