வாக்கு எந்திரத்திற்குள் நெளிந்த பாம்பு! அலறி ஓடிய வாக்காளர்கள்!!

கேரளாவில் ஒரு வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த விவிபாட்(ஒப்புகைச் சீட்டு காட்டும்) எந்திரத்திற்குள் இருந்து பாம்பு வரவே வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர்.

நாடு முழுவதும் இன்று 3வது கட்டமாக 117 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கேரளாவில் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்பட 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் கண்ணூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கூட்டணி சார்பில் பி.கே.ஸ்ரீமதியும், காங்கிரஸ் சார்பில் சுரேந்திரனும், பா.ஜ.க. சார்பில் பத்மநாபனும் களத்தில் உள்ளனர்.

இந்த தொகுதிக்கு உட்பட்ட மையில் கண்டக்காய் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் காலையில் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வந்தது. ஒரு வாக்காளர் வாக்களித்து கொண்டிருந்த போது, வாக்கு எந்திரத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஒப்புகைச்சீட்டு காட்டும் எந்திரத்திற்குள் இருந்து ஒரு பாம்பு ‘புஸ்.ஸ்ஸ்...’’ என்று வெளியே வந்தது. உடனே அவர் அலறியடித்து வெளியே ஓடவும், பூத்துக்குள் காத்திருந்த மற்றவர்களும் பயத்தில் ஓடினர். பின்னர், பாம்பு விரட்டியடிக்கப்பட்டு சிறிது நேரம் கழித்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

வாக்குச்சாவடியில் மரணம்: சட்டீஸ்கரில் இன்றும் தேர்தல் நடைபெற்றது. அங்கு ராய்கார் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த 46 வயது பெண் திடீரென சுருண்டு விழுந்தார். ஏஞ்சலா டோப்போ என்ற அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசாரத்தில் பாம்பு டான்ஸ் ஆடி கலக்கிய அமைச்சர்....
More News >>