`என் படத்த விற்க விமல் யாரு... களவாணி 2 படத்துக்கு விதித்த தடையால் கொதிக்கும் இயக்குநர்

விமலின் களவாணி 2 திரைப்படத்தை ஜூன் 10 ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓவியா, நடிகர் விமல் நடிப்பில் வரும் மே 4 ம் தேதி வெளியாக இருந்த களவாணி 2 திரைப்படத்தை தமிழகம் மற்றும் புதுவையில் வெளியிடுவதற்கான திரையரங்க உரிமையை சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பெற்றிருந்தது. இந்த உரிமையை மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்த விதிகளை மீறி மெரினா பிக்சர்ஸ் நிறுவனம் கியூப் சினிமா டெக்னாலஜி நிறுவனத்திற்கு சில நிறுவனங்களின் பங்களிப்போடு களவாணி 2 படத்தை வெளியிடும் உரிமையை வழங்கியுள்ளது. இவ்வாறு படம் வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தை மீறி விதிமீறல்கள் நடந்துள்ளதால் ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்படும். களவாணி2 படத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என அந்நிறுவனத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜூன் 10 ம் தேதி வரை களவாணி-2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கில் மெரினா பிக்சர்ஸ், ஏ3வி சினிமாஸ், வருமன்ஸ் ப்ரோடெக்சன், ஜெமினி எஃப் எக்ஸ், கியூப் சினிமா டெக்னாலஜிஸ் நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். இதுகுறித்து இயக்குநர் சற்குணம் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் 'களவாணி-2' படத்தை நான்தான் தயாரித்தேன் என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் சற்குணம் பெயரில்தான் வர்மன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தன் படத்தை வியாபாரம் பேச விமலுக்கும் சிங்கார வேலனுக்கும் உரிமையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ``இந்த படத்தை நான் தயாரித்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எந்த த நிறுவனத்துடனும் நான் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை. இந்தத் தடை எளிதாக நீக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் களவாணி 2 படம் வெளியாவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

‘தர்பார்’ படப்பிடிப்பில் இணைந்தார் நயன்தாரா!
More News >>