நாட்டுக்கு இன்னும் நிறைய செய்வார் மோடி! மனைவி ஜசோதா பென் பேட்டி!!
பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு இன்னும் நிறைய செய்வார் என்று அவரது மனைவி ஜசோதா பென் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியும், அவரது மனைவி ஜசோதா பென்னும் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டனர். மோடி திருமணமானவர் என்ற செய்தியே கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின் போது அவரது வேட்புமனுவில் குறி்ப்பிட்ட பிறகுதான் வெளியுலகிற்கு தெரியவந்தது.
தற்போது ஜசோதா பென், குஜராத்தில் தனியாக வசித்து வருகிறார். அவர் இன்று காலை அஞ்ஜா நகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு ஏராளமான நல்ல காரியங்களை செய்திருக்கிறார். இன்னும் நிறைய செய்வார்’’ என்று கூறினார். பிரதமரின் தாயார் ஹீராபென், காந்திநகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக, அவரிடம் பிரதமர் மோடி நேரில் வந்து ஆசி பெற்று விட்டு சென்றார்.
3ம் கட்ட மக்களவைத் தேர்தல்; அகமதாபாத்தில் மோடி, அமித்ஷா வாக்களித்தனர்!