நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு போட்டதாகக் கூறியது பொய்யா? உண்மையில் நடந்தது என்ன

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் குறித்தும் சர்ச்சையான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்ததும், தானும் தனது மனைவியும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வாக்களித்ததாக பேட்டி அளித்தார். தனது சமூக வலைத்தளத்தில் வாக்களித்த மையுடன் கூடிய விரல் போட்டோவையும் பதிவு செய்திருந்தார். நடிகர் ஸ்ரீகாந்த் வாக்கு செலுத்தியது குறித்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, `அவர் வாக்களிக்கவில்லை, அவரது விரல்களில் மை மட்டுமே வைக்கப்பட்டது’ என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.என்னதான் நடந்தது என்று ஆராய்ந்ததில் கிடைத்த தகவல்கள் கீழே..நடிகர் ஸ்ரீகாந்த் இதற்குய் முந்தைய தேர்தல் வரை சென்னை சாலிகிராமத்தில் இருக்கக்கூடிய காவேரி பள்ளிக் கூடத்தில்தான் வாக்கு செலுத்தி வருகிறார். ஆனால் இதனிடையே வீடு மாறிவிட்டார். இதனால் அவரின் பெயரும் வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருக்கு தகவல் கொடுக்கப்படவில்லை. தேர்தல் அன்று காலை 7 மணிக்கே வாக்குச்சாவடி வந்த ஸ்ரீகாந்துக்கு ஏமாற்றம் காத்திருந்தது. லிஸ்டில் அவர் பெயர் இல்லை என்றதுல் அங்கிருந்த சில அதிகாரிகள் நீண்ட ஆலோசனைக்கு பிறகு அவர் வழக்கமாக இங்கு தான் வாக்களிப்பார். எனவே அவர் வாக்களிப்பதில் பிரச்னை இல்லை என்று கூறி அவரை வாக்களிக்க அனுமதித்துள்ளனர். அவர் வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். வேறு வாக்குச்சாவடிக்கு பெயர் மாற்றப்பட்ட போதிலும் ஒரு நடிகர் என்பதால் ஸ்ரீகாந்தை வாக்களிக்க அனுமதியளித்துள்ளது குறித்து சர்ச்சை எழுந்தது. அதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, `அவர் வாக்களிக்கவில்லை, அவரது விரல்களில் மை மட்டுமே வைக்கப்பட்டது’ என்று அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.

பாலிவுட்டில் படமாகும் உலகக்கோப்பை 1983.. அதிக ரன்கள் குவித்த வீரரின் வேடத்தில் நம்ம ஜீவா
More News >>