தொடர் தோல்வியை தவிர்ப்பாரா தல தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த சென்னை அணி!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள 41வது லீக் போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
12வது ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி வழக்கம் போல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிராக கடந்த போட்டியில் தனி ஒருவனாக போராடி கடைசியில் ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்.
பெங்களூருவுக்கு எதிராக விளையாடிய சென்னை அணியில் தோனியை தவிற மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இன்றைய போட்டியில் அணியில் பேட்டிங் வரிசையில் பெரிதாக எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஹர்பஜனை இறக்கியுள்ளார்.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
5 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4ம் இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேற கடுமையாக போட்டிப் போடும் என்பதில் சந்தேகமில்லை. கேன் வில்லியம்ஸ்க்கு பதிலாக ஷகிப் அல் ஹசன் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
அதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை காணும் சென்னை ரசிகர்களுக்கு இந்த போட்டி நிச்சயம் பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஐபிஎல் இறுதிப்போட்டி’ சென்னையில் இல்லை...ஐதராபாத்திற்கு மாற்றம்!