மாதவிடாய் குறித்த புரிதல் இவங்களுக்கு எப்போது ஏற்படும்? - இணையத்தில் கலாய்க்கப்படும் மாதவிடாய் கறை திருமண ஆடை!

’மாதவிடாய் கறை திருமண ஆடை’ என மோசமாக இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறது இந்த புதுவிதமான திருமண ஆடை. வெளிநாட்டில் உள்ளவர்கள் மத்தியிலும் இன்னும் இந்த மாதவிடாய் குறித்த புரிதல் ஏற்படவில்லை என்பதற்கு தற்போது வைரலாகி வரும் இந்த திருமண ஆடையின் புகைப்படமும் ஒரு சான்று.

திருமண ஆடை முழுவதும் வெள்ளை நிறமாக இருக்க வேண்டாம் என எண்ணிய பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண் கேட்டுக் கொண்டதன் படி வெண்ணிற திருமண கவுனின் கீழ் பகுதியில் சிகப்பு நிற டை அடிக்கப்பட்டு, ஒரு புதுவிதமான கலர் ஷேட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணம் ஆடையின் புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்ட உடன் உலகளவில் வைரலாக்கப்பட்டு வருகிறது. ஆனால், தவறான ஒரு கண்ணோட்டத்தில் இந்த ஆடை வைரலாகி வருவது தான் ஜீரணிக்க முடியவில்லை.

திருமணத்தின் போது, அந்த பெண்ணுக்கு மாதவிடாய் காலம் என்பதால், இவ்வாறு அந்த உடையை வடிவமைத்துள்ளார் என சிலர் அருவருப்பான கமெண்டுகளை அள்ளி வீசியுள்ளனர். இன்னும் சில பேர் இந்த ஆடைக்கு அவர்களாகவே (period stain tampon bridal dress) மாதவிடாய் கறை திருமண ஆடை என்று பெயரிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

பெண்கள் தாய்மை அடைய தேவையான ஒரு விஷயமான மாதவிடாயை தீட்டு என்றும் தூய்மைக்கு எதிரான விஷயமாகவும் எண்ணுவதில் இருந்து எப்போது தான் இந்த சமூகம் விழிப்புணர்வு அடையப் போகின்றது என்பது தான் தெரியவில்லை.

ஜெய்க்காக போட்டிப்போடும் மூன்று நாகினிகள்! திக் திக் நீயா 2 கதை இதுதான்
More News >>