தர்பார் ஷூட்டிங் ஸ்டில்ஸ் லீக் வேற லெவல் எனர்ஜியுடன் சூப்பர்ஸ்டார்!
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றன.
மும்பை போலீசாக தர்பார் படத்தில் ரஜினி நடிக்கிறார் என ஃபர்ஸ்ட் லுக்கில் வெளியான போலீஸ் உடை மற்றும் அங்கவஸ்திரங்களை வைத்து சினிமா சிஐடிக்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து, மும்பையில் ரஜினிகாந்தின் தர்பார் பட ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது என்ற விஷயம் வெளியானது.
லைகா நிறுவனம் சார்பில், நடிகை நயன்தாரா தர்பார் பட ஷூட்டிங்கில் இன்று முதல் கலந்து கொள்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்ட அதே நேரத்தில் தர்பார் படத்தில் சூப்பர்ஸ்டார் எனர்ஜெட்டிக்காக நடந்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் இணையத்தில் லீக்காகி வைரலாகி உள்ளன.
மேலும், ரஜினியுடன் காமெடி நடிகர் யோகி பாபு உடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளதால், ரஜினி ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் தேவையில்லை, தலைவரின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் ஒன்றே போதும் என ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
60 நாள் கால்ஷீட்டுடன் தர்பார் படத்தில் நடிக்க உள்ள நயன்தாராவுக்கு விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இணையாக கொடுக்கப்பட்ட பவர்ஃபுல் ரோலை விட அதிக பவர்ஃபுல் ரோல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தர்பார் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
குழந்தைகளின் தொல்லை இல்லாமல் அம்மாக்கள் வாக்களிக்க இப்படியொரு ஏற்பாடு எங்கு தெரியுமா?