விஷாலுக்கு நேரம் எப்படி இருக்கு? திருப்புமுனையாக அமையுமா அயோக்யா

விஷால் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகிவரும் படம் அயோக்யா. இப்படத்தின் டிரெய்லர் தான் சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

சண்டகோழி 2 படத்துக்குப் பிறகு, விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனரா பணியாற்றிய வெங்கட்மோகன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தெலுங்குல ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த அயோக்யா.

விஷாலுக்கு ஜோடியா ராஷி கண்ணா நடித்திருக்கும் இப்படத்தில் முக்கிய ரோல்களில் கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி போன்ற சில முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யூடியூப்பில் வெளியான இந்தப் படத்தின் டீஸர் சமுக வலைதளங்களில் வைரலானது. பின்னர், படத்தை ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், விஷாலின் திருமண வேலைகள், பட ரிலீஸூக்கு தடையாக அமையவே, மே 10-ஆம் தேதி படத்தை ரிலீஸ் என உறுதி செய்துள்ளது படக்குழு.

இந்நிலையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டது படக்குழு. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது. இப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு, விஷாலுக்கு சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக இப்படம் அமையும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

விஷாலுக்கு விரைவில் திருமண நடைபெறவிருக்கிறது. தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொதுச்செயளாலர் என பல பதவிகளில் இருக்கும் விஷாலுக்கு நிச்சயம் ஒரு ஹிட் தேவை. அதை அயோக்யா தரும் என்றே விஷாலும் நம்புகிறார்.

More News >>