காரசாரப் பூண்டு சட்னி ரெசிபி

இட்லி, தோசைக்கு ஏற்ற சைட் டிஷ் காரசாரமான பூண்டுச் சட்னி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

பூண்டு - 20 பல்

சின்ன வெங்காயம் - 5

காய்ந்த மிளகாய் - 10

புளி - ஒரு துண்டு

கடுகு - கால் டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை:

முதலில், ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.

பிறகு, இதனை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மையாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

மீண்டும் வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அடுப்பை அனைத்துவிட்டு, அரைத்து வைத்த விழுதை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கிவிடவும்.

இதில், நல்லெண்ணெய் அதிகமாக சேர்த்திருப்பதால் எளிதில் கெட்டுவிடாது. அதனால், ஒரு தப்பாவில் அடைத்து வைத்தும் அவ்வப்போது பயன்படுத்தி’ கொள்ளலாம்.

அவ்ளோதாங்க.. சுவையான பூண்டு சட்னி ரெடி..!

More News >>