ஹேப்பி பர்த்டே மாஸ்டர் பிளாஸ்டர்! கிரிக்கெட் கடவுளின் 46வது பிறந்த தினம் இன்று!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 46வது பிறந்த தினம் இன்று உலக கிரிக்கெட் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

7-ம் நம்பர் ஜெர்ஸியை பார்த்து இப்போ எப்படி தோனி.. தோனி.. என ரசிகர்கள் கத்துகின்றனரோ, அதைவிட பல மடங்கு அப்போதெல்லாம் அந்த 10-ம் நம்பர் ஜெர்ஸியை பார்த்து தான் இந்தியாவே சச்சின்.. சச்சின்.. என்ற தாரக மந்திரத்தை ஜபித்தது.

1973-ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ரமேஷ் டெண்டுல்கர் மற்றும் ரஜினி டெண்டுல்கருக்கு மகனாக மும்பையில் பிறந்தவர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.

லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் கடவுள் என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த, இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மட்டும்தான்.

உலகில் உள்ள அனைத்து சிறந்த பந்துவீச்சாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். பல ரெக்கார்ட்ஸ்களை தனது காலத்தில் படைத்து விட்டு, இப்போது விளையாடும் வீரர்கள் அதனை முறியடிக்க முடியாமல் தவிக்கும் அளவுக்கு சாதனைகளை படைத்துச் சென்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

”விமர்சகர்கள் எனக்கு கிரிக்கெட் சொல்லித் தரவில்லை; மேலும், அவர்களுக்கு எனது உடலும் மனதும் எப்படி வேலை செய்யும் என்பதும் தெரியாது” என தன்னைக் குறித்த விமர்சனங்களை முறியடித்து சாதித்த சாதனை நாயகன் சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்

நானா ஃபார்ம்ல இல்ல… சென்னையில் விளாசிய வாட்சன்; அதிர்ந்தது ஐதராபாத் அணி!
More News >>