தளபதி 63 பட ஷூட்டிங்கில் திடீரென ஏற்பட்ட விபத்து ஒருவர் படுகாயம்

தளபதி 63 பட ஷூட்டிங்கின் போது ஃபோக்கஸ் லைட் திடீரென விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை இவிபி பூங்காவில் நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்காக சென்னை இவிபி பூங்காவில் பிரம்மாண்ட கால்பந்தா மைதான செட்டை படக்குழு அமைத்துள்ளது.

இந்த செட்டில் 100 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் தவறி விழுந்ததில் அந்த இடத்திற்கு கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த மின் ஊழியர் செல்வராஜ் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயம் அடைந்த செல்வராஜை உடனடியாக படக்குழுவினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தளபதி 63 படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்த நயன்தாரா, நேற்று ரஜினி நடிக்கும் தர்பார் பட ஷூட்டிங்கில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படையப்பாவுக்கு நீலாம்பரி தர்பாருக்கு நயன்தாரா? தர்பார் அப்டேட்
More News >>