ரஷ்ய மாடலிங் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

சென்னையில், நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை காட்டி ரஷ்ய மாடலிங் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் ஜானே கடாரியா (30), மாடலிங் பெண்ணான இவர், தமிழ் சினிமா மீது ஆர்வம் இருந்ததால் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். பின்னர், எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி மாடலிங் மற்றும் சினிமா துறையில் வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார். அதற்காக அவர் பல நடன அசைவுகள் மற்றும் பல்வேறு போஸ்களில் படம் எடுத்துள்ளார்.

அப்போது, சென்னையை சேர்ந்த ரூபேஷ் குமார் (26) என்பவர் ஜானே கடாரியாவை அணுகி, நீங்கள் எடுத்த புகைப்படம் நன்றாக இருக்கிறது எனக் கூறி நட்பாக பழகி உள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த மாடலிங் ஜானே கடாரியா, ரூபேஷ்குமாருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு ரூபேஷ் குமார் தனது காதல் வலையில் அவரை வீழ்த்தியுள்ளார்.

பிறகு மாடலிங் ஜானே கடாரியா அறைக்கு சென்று ரூபாஷ் குமார் இருவரும் நட்புடன் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை காட்டி இணைய தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும், அவரது செல்போனுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியும் தொடர்ந்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜானே கடாரியா, ரூபேஷ் குமாரை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பின்னர், ஜானே கடாரியா கடந்த மாதம் 14ம் தேதி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன்படி விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் துரை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது, ரஷ்ய மாடலிங் ஜானே கடாரியாவுடன் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை வைத்து மிரட்டி ரூபேஷ் குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து ரூபேஷ் குமார் மீது 354, 506(i), 67 ஐடி ஆக்ட் மற்றும் பெண் கொடுமை தடுப்பு சட்டம் என 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.

கிருஷ்ணர் விவகாரத்தில், திராவிட கழக தலைவர் வீரமணியை கைது செய்ய உத்தரவிட முடியாது- உயர் நீதிமன்றம்
More News >>