தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ இது தான் காரணமாம்..! சு.சாமி கொடுக்கும் விளக்கம்
தமிழகம் கடந்த முப்பது ஆண்டு காலமாக அமைதிப் பூங்காவாக திகழ , விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த இரு முக்கிய முடிவுகளே காரணம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி புது விளக்கம் ஒன்றை கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் ஆரம்பம் முதலே அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பவர் தான் சுப்பிரமணிய சாமி . வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இவருக்கு வாடிக்கையான ஒன்று. இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்ட பின்னரும் அவர்களைப் பற்றிய கருத்துக் கூறி நினைவு படுத்திக் கொண்டே இருப்பது வழக்கமாகி விட்டது.
தற்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பால் அந்நாடு மட்டுமின்றி உலக நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதற்கு காரணம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு என்ற நிலையில், சம்பந்தமே இல்லாமல் விடுதலைப் புலிகள் பற்றி டிவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
சுப்பிரமணிய சாமி இன்று தனது டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அமைதி நிலவக் காரணமே புலிகள் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த இரு முக்கிய முடிவுகளே காரணம். ஒன்று 1991-ல் பிரதமராக சந்திரசேகர் இருந்த போது, அவருடைய அமைச்சரவையில் இருந்த தம்மால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. மற்றொன்று 2009-ல் இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக அழித்த ராஜபக்சேவுக்கு, மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு முழு ஆதரவு கொடுத்ததும் தான் என்று சுப்பிரமணியசாமி, சம் சம்பந்தமில்லாமல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போதைய சூழலில் அவருடைய இந்தப் பதிவுக்கு என்ன காரணம் என்பது அவருக்கே வெளிச்சம்.
கோவை குண்டுவெடிப்பு போல் இலங்கையில் நடத்தத் திட்டம்..! இந்தியா 3 முறை எச்சரிக்கை..! -'திடுக்' தகவல்