கோவை குண்டுவெடிப்பு போல் இலங்கையில் நடத்த சதிதிட்டம்..! இந்தியா 3 முறை எச்சரிக்கை..! -திடுக் தகவல்
கோவையில் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரித்தது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கடந்த 21ம் தேதி அன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அப்போது, காலை 9 மணி அளவில் கொழும்பு புனித அந்தோணியார் தேவாலயம், நெகம்போ-புனித செபஸ்தியார் ஆலையம், மட்டக்களப்பு இவாஞ்சலிகள் ஆலயம் ஆகிய மூன்று தேவாலயங்களிலும் அடுத்தடுத்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். 3 தேவாலங்கங்கள், 3 நட்சத்திர விருத்திகள் என ஒரே நாளில் எட்டு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 310-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ரத்த வெள்ளம் ஆறாக ஓடிய காட்சிகளைக் கண்டு இலங்கை மக்கள் கடும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, நியூசிலாந்தில் கிறைஸ்ட் சர்ச் என்ற இடத்தில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இலங்கை தொடர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதாகத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. போலீஸார் நடத்திய சோதனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தன்னுடைய உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நீர்கொழும்பு பகுதியில் உள்ள செயிண்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் பை நிறைய வெடிகுண்டுகளுடன் சென்று முகம்மது தலா ஃபாரான் என்ற பயங்கரவாதி கொடூரத் தாக்குதல் நடத்தியதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியா எச்சரித்தும் அதனை அலட்சியமாக விட்டுவிட்டோம் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் நடத்திய விசாரணையில், அங்கு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் போல் இலங்கையிலும் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டம் தீட்டி உள்ளதாக கடந்த ஏப்ரல் 4ம் தேதி இந்தியா எச்சரித்ததாக தெரிவித்த அவர், தேவாலயங்களைத் தவிர்த்து கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரகம் குறிவைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், ஏப்ரல் 4ம் தேதிக்கு பிறகும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு ஒரு மணி நேரம் முன்பு கடைசி எச்சரிக்கை இந்தியாவிடம் இருந்து வந்தாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பழிக்குப் பழி வாங்கவே இலங்கை குண்டுவெடிப்பு! விசாரணையில் ‘திடுக்’ தகவல்!!