நம் நாட்டுல இப்ப மோடி அலையே இல்ல பாக்ஸிங் சாம்பியன் விஜேந்தர் பேட்டி!
நாட்டில் தற்போது மோடி அலை என்ற பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள பிவானி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் களமிறக்கப்பட்டுள்ளார்.
33வயதாகும் விஜேந்தர் சிங், பிவானி மக்களவைத் தொகுதியில் செவ்வாயன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாட்டில் இப்போது மோடி அலை என்ற ஒன்று இல்லவே இல்லை” என்றார். மேலும், நான் அதிகம் பேசுவதை விட எனது வேலை அதிகம் பேசவேண்டும் என தான் நினைப்பதாக கூறினார்.
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெண்கலம் பெற்றுத் தந்த தனக்கு அரசியல் களம் புதிதாக இருந்தாலும், மக்களுக்கான தேவையை அறிந்து செயல்படும் அறிவும் ஆற்றலும் தன்னிடம் அதிகமாகவே உள்ளது என்றும் விஜேந்தர் சிங் கூறினார்.
காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள விஜேந்தர் சிங், கடந்த 2013-ம் ஆண்டு ஹெராயின் போதைப் பொருளை வாங்கியதாக பஞ்சாப் போலீசார் வழக்கு பதிவு செய்தது தான் பொதுவாழ்வில் அவர் மீது விழுந்த முதல் கறை ஆகும். ஆனால், அதனையும் தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவு நடத்திய போதை மருந்து உட்கொண்டாரா என்ற சோதனையில் தன் மீது குற்றம் இல்லை என முறியடித்தவர் விஜேந்தர் சிங்.
`சேப்பாக்கத்தில் அதிரடி காட்டிய வார்னர், மனிஷ் பாண்டே' - சி.எஸ்.கே 176 ரன்கள் இலக்கு