கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு: அதிகபட்சமாக கண்ணூரில் 83.05 % - ராகுல் காந்தியின் வயநாட்டில் 80.31%

நாட்டிலேயே இதுவரை நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் தான் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக 77.68% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிக பட்சமாக கண்ணூர் தொகுதியில் 83.05 % வாக்குகளும், ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் 80.3% வாக்குகளும் பதிவாகி சாதனை படைத்துள்ளது கேரள மாநிலம் .

அரசியல் விழிப்புணர்வு பெற்ற மாநிலமாக திகழும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரிகள் தலைமையிலான இடது முன்னணி ஆகியவை இடையே தான் இருமுனைப் போட்டி இருந்து வந்தது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மல்லுக் கட்டுவதால் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் தேசிய அளவில் கேரளா முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் நேற்று ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு சதவீதமும் நாட்டிலேயே இங்கு தான் அதிகபட்சமாக ஒட்டு மொத்த அளவில் 77.08% பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக கண்ணூர் தொகுதியில் 83.05 % வாக்கு பதிவாகியுள்ளது. ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் 80.3% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல் ஆலப்புழா, சாலக்குடி, காசர்கோடு, கோழிக்கோடு, ஆலத்தூர், வடக்கஞ்சேரி தொகுதிகளில் 80% மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கோட்டயம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், இடுக்கி ஆகிய தொகுதிகளில் 75 % மேல் பதிவான நிலையில், கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் தான் குறைந்த பட்சமாக 73.45% வாக்குகள் மட்டும் பதிவாகியுள்ளது. இங்கு காங்கிரசில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், இடது முன்னணியில் திவாகரன், பாஜக சார்பில் கும்மணம் ராஜ சேகரன் ஆகிய முக்கிய பிரபலங்கள் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

‘கை’க்கு வாக்களித்தால் ‘தாமரை’ மலர்கிறது..! –கேரள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்
More News >>