மீண்டும் குண்டுவெடிப்பு! இலங்கை சூழல் குறித்து அமைச்சர் ருவான் விளக்கம்
இலங்கை தொடர் வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. அதில், 39 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு அமைச்சர் ருவான் விஜேவரதனே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர், ‘இன்னும் இரண்டு நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் உறுதிப்படுத்தப்படும். நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். தீவிரவாத குழுவின் தலைவர் தற்கொலைப் படையாய் செயல்பட்டுள்ளார். இலங்கையில் ‘சாங்கரி லா’ ஹோட்டல் தாக்குதலில் தற்கொலைப்படை தலைவன் பலியாகினர். தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் இங்கிலாந்தில் பிடிபட்டுள்ளார். அவர், ஆஸ்திரேலியாவில் படித்து இலங்கைக்குத் திரும்பியவர். குண்டு வெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்திருக்கலாம்' என்றவர், 'தீவிரவாதிகள் அடையாளத்தை தற்போது வெளியிட முடியாது' என்று கூறினார்.
இதற்கிடையில், கொழும்பு, வெள்ளவத்தையில் சவாய் திரையரங்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு உள்ளதா என போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, இருசக்கர வாகன பெட்டியை திறக்க முயன்றபோது, குண்டு வெடித்து. இது இலங்கையில் வெடிக்கும் 10வது குண்டாகும். இந்த விபத்தில் உயிர் சேதம் பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாக வில்லை.
இலங்கையில், தற்போது அடுத்தடுத்து வெடிகுண்டு சிக்குவதால் வாகன சோதனை மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, பயிற்சி பெற்ற 160 தீவிரவாதிகள் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனால், இலங்கையில் உச்ச கட்ட பதற்றமான சூழல் நிலவுகிறது.
மதுரை சிறையில் சோதனை: போலீசார், கைதிகள் மோதலால் போர்களமான சிறை வளாகம்