எண்ட்கேமில் அந்த சீன் இல்லை இந்தியாவில் 24 மணி நேரம் திரையிடப்படுகிறது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வரும் ஏப்ரல் 26ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ப்ரீமியர் ஷோ காட்சிகளை பார்த்த உலகின் சிறந்த விமர்சகர்கள் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் மார்வெல் திரையுலகின் ஆகச் சிறந்த படம் என்ற பாராட்டுப் பத்திரத்தை கொடுத்துள்ளனர்.

ஏப்ரல் 26ம் தேதி இந்தியாவிலும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை 24 மணிநேரமும் இடைவெளி இன்று திரையிடும் அனுமதியை பிவிஆர் மல்டிபிளக்ஸ் சினிமா வாங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதுவரை இந்தியாவிலேயே பத்து லட்சத்துக்கும் மேலான ப்ரீ புக்கிங் டிக்கெட்டுகள் விற்று புதிய சாதனை படைத்துள்ளதாம்.

மேலும், மார்வெல் படங்கள் ஒவ்வொன்றிலும், படத்தின் முடிவில் கடைசியாக போஸ்ட் கிரெடிட்ஸ் சீன் போடப்படும். ஆனால், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் இறுதி பாகம் என்பதால், இந்த படத்தில் அந்த போஸ்ட் கிரெடிட்ஸ் சீன் இல்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.

சரியான அளவுக்கான எமோஷன் மற்றும் சாகசங்கள் நிறைந்த படமாக உருவாகியுள்ள அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கான டிக்கெட் புக் மை ஷோ வெப்சைட்டில் நொடிக்கு 18 டிக்கெட்டுகள் வீதம் விற்றுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவான்ஸ், மார்க் ரஃபலோ, கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஸ்கார்லெட் ஜோஹன்சன் மற்றும் பிரை லார்சன் இன்னும் பல நடிகர்களுடன் உருவாகியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது.

ஜேம்ஸ் பாண்டாக நடிக்க ஆசை.. தோர் நடிகரின் கனவு நிறைவேறுமா?
More News >>