சிஎஸ்கே...போட்டியை காண்பதற்கான டிக்கெட் விற்பனை ஜரூர்
சென்னை-மும்பை அணிகள் மோதவுள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. வரும் 26ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலபரிச்சை நடத்த உள்ளன. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள் கவுண்டர் திறந்ததும் முந்தியடித்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதனால், ரசிகர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே சற்று வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
புள்ளிப்பட்டியலில், முதல் இடத்தில் உள்ள சென்னை அணி முதல் அணியாக ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டது. இதனால், உற்சாகம் அடைந்துள்ள சென்னை ரசிகர்கள் போட்டியைக் காண ஆர்வம் காட்டுகிறார்கள்.
ரகானே அதிரடி சதம் வீண்; ராஜஸ்தானை வென்றது டெல்லி அணி!