டிக்-டாக் தடை நீக்கம் - நிபந்தனையுடன் சிக்னல் கொடுத்த நீதிபதிகள்
சீனாவில் இருந்து டிக்-டாக் என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அதனால் தீமை விளைவிக்கும் இந்த செயலிக்கு தடை விதிக்க கோரி எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
மத்திய அரசின் வேண்டுகோள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலி நீக்கப்பட்டது. இதற்கிடையில், தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செயலியை உருவாக்கிய நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் ஏப்ரல் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தடை தளர்ந்ததாக கருதப்படும் என்று கூறு வழக்கை ஒத்தி வைத்தனர். அதன்படி இன்று இந்த வழக்கு நடைபெற்றது. அப்போது, நிபந்தனைகளுடன் டிக்-டாக் மீதான தடையை நீக்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது. நிபந்தனைகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும். டிக் டாக் செயலியில் ஆபாச மற்றும் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானால் அவமதிப்பு நடவடிக்கை பாயும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அப்போது வாதிட்ட நிறுவனம், ``நீதிமன்ற தடைக்குப்பின் சுமார் 6 மில்லியன் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தது.
`அனைத்துக்கும் எங்களையே எதிர்பார்க்கக்கூடாது' - டிக் டாக் ஆப்பை தடை செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்