கூந்தல் வளர்வதற்கு இந்த இயற்கை வழிகளை முயற்சி பண்ணுங்க
தலையில் முடி நன்கு வளர வேண்டும் என்று விரும்பாதவரே கிடையாது. தோற்றப் பொலிவில் கூந்தலுக்கு முக்கிய இடம் உண்டு. கோரை முடி, சுருள்முடி, வறண்ட முடி, மென்மையான முடி, அலையலையான முடி என்ற ஒவ்வொருவரின் தலைமுடியும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.
தலைமுடி நன்கு வளர இயற்கையான சில எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
கரிசலாங்கண்ணி இலை: உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர்கரிசலாங்கண்ணிதான். முடியை இயற்கையாக வளர வைக்கும் தன்மை இதற்கு உண்டு.கரிசலாங்கண்ணி பொடி மற்றும் எண்ணெய் பல இடங்களிலும் கிடைக்கிறது. கரிசலாங்கண்ணி இலையை அரைத்து தலையில், முடிக்குக் கீழாக படும்படி தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்கலாம். இதை தொடர்ந்து செய்து வர தலைமுடி நன்றாக வளரும்.
வேப்பிலை: சரும பிரச்னைகளுக்கு வேப்பிலை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. முடி உதிர்தலை தடுக்கும் பண்பு இதற்கு உண்டு. இதையும் தலையில் தேய்க்கலாம். தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டுவதோடு, முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி கூந்தலை வளரச் செய்யும் ஆற்றல் இதற்கு உள்ளது. குளிக்கும் முன்பதாக நீரில் வேப்பிலைகளை போட்டு பின்னர் குளிப்பதும் பயன் தரும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. பொடுகு தொல்லையை போக்க நெல்லிக்காய் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் அரிப்பு நெல்லிக்காய் பயன்படுத்தினால் குணமாகும். கூந்நல் தொடர்பான பல பிரச்னைகளுக்கு நெல்லிக்காய் நல்ல தீர்வை தரும். தலைமுடி கறுமையாகவும் வலிமையாகவும் மாறுவதற்கு நெல்லிக்காயை பசைபோன்று அரைத்து தலையில் தடவி வர வேண்டும்.
சீயக்காய்: சீயக்காயில் சி மற்றும் டி வைட்டமின்கள் அதிகம் உள்ளன. தலைமுடி வளர்வதற்கும் உறுதியாவதற்கும் சீயக்காய் உதவும். முடி நீளமாக வளரச் செய்து பளபளப்பாக்கும் தன்மை இதற்கு உண்டு. சீயக்காய் அடங்கிய ஷாம்பூ எல்லா இடங்களிலும் கிடைக்கும்.
பூவந்தி: பூவந்தி அல்லது கூகமத்தி அல்லது நெய்கொட்டான் என்று அழைக்கப்படும்மரத்தின் கொட்டை பல காலமாக பெண்களால் இயற்கையான ஷாம்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தால் கூந்தலை பலப்படுத்தும்.
வல்லாரை: வல்லாரை கீரைக்கு தலைமுடியை வளரச் செய்யும் ஆற்றல் உண்டு. முடியின்வேர்க்காலை இது பலப்படுத்தும். வல்லாரை, நெல்லி, பூவந்தி, துளசி ஆகியவற்றை அஸ்வகந்தா பொடி சேர்ந்து தயிருடன் கலந்து பசையாக்கி தலையின் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.
காரசாரப் பூண்டு சட்னி ரெசிபி