பீட்ரூட் சட்னி ரெசிபி
இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான மற்றும் சத்தான சைட் டிஷ் பீட்ரூட் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2
துவரம் பருப்பு - 2
பூண்டு - 6
காய்ந்த மிளகாய் - 7
பீட்ரூட் - ஒரு கப்
புளி - ஒரு துண்டு
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை:
ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடபலை பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, பொடியாக நறுக்கிய பீட்ரூட், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பீட்ரூட்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும்.
பின்னர், மிக்ஸி ஜாரில் பீட்ரூட் கலவையை கொட்டி, அத்துடன் புளி, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பீட்ரூட் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.அவ்ளோதாங்க.. சுவையான பீட்ரூட் சட்னி ரெடி..!